Saturday, June 13, 2015

" சங்க இலக்கியங்களின்மீது சுமத்தப்பட்ட களங்கத்தை அகற்ற முன்வாருங்கள்



நூல் வெளியீட்டு விழா அழைப்பு 

வணக்கம்.

சங்க இலக்கியங்களின் வழியாக நாம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்த தமிழ்ச் சமூகத்தையும் பண்பாட்டையும் அறிகிறோம். இப்போது இருக்கும் சாதி அடிப்படையிலான சமூக வேற்றுமைகள் அன்றைய தமிழ்ச் சமூகத்தில் இல்லை என்பதே பொதுவான கருத்து. ஆனால் சங்க இலக்கியப் பிரதிகள் சிலவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ள ஜார்ஜ் எல் ஹார்ட் என்ற அமெரிக்க நாட்டைச் சேர்ந்த ஆய்வாளர் , பண்டைய தமிழ்ச் சமூகத்தில் இன்றிருப்பது போன்றே சாதியும் தீண்டாமையும் இருந்தன என வாதிடுகிறார். ஆரியர்கள் தீண்டாமை என்ற கருத்தை தமிழர்களிடமிருந்துதான் கற்றனர் என்கிறார். அதற்கு சங்க இலக்கியப் பிரதிகளை ஆதாரங்களாகக் காட்டுகிறார். மேலைநாட்டு தமிழ்ச் செவ்வியல் இலக்கிய ஆய்வுகளின் மீது அவரது கருத்து மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 

சங்க இலக்கியப் பிரதிகளை ஜார்ஜ் எல் ஹார்ட் போன்றவர்கள் எப்படி தவறாகப் புரிந்துகொண்டிருக்கின்றனர் என்பதை விளக்கி மூத்த தமிழறிஞர் வீ.எஸ்.ராஜம் எளிய நடையில் எழுதியுள்ள நூலை மணற்கேணி பதிப்பகம் வெளியிடுகிறது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் 
தொல். திருமாவளவன் இன்று 12. 6-2015 மாலை இந்த நூலை வெளியிட தமிழறிஞர்கள் அவ்வை நடராசன், இந்திரா பார்த்தசாரதி, மா. இராசேந்திரன், பேராசிரியர் அருணன், மணி மு மணிவண்ணன் ஆகியோர் நூலைப் பற்றி பேசவுள்ளனர். 

இவ்விழா சென்னை, சி.ஐ.டி.காலனியிலுள்ள கவிக்கோ அரங்கத்தில் நடைபெறவுள்ளது. சங்க காலத்தின்மீது சுமத்தப்பட்டிருக்கும் களங்கத்தைத் துடைக்கும் முயற்சி இது. 
இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு  உரிமையோடு அழைக்கிறோம்.

அன்புடன்
ரவிக்குமார்
மணற்கேணி பதிப்பகம் 




No comments:

Post a Comment