Monday, March 4, 2013

பள்ளிகளில் தொடரும் பாகுபாடுகள்




இந்தியாவில் தீண்டாமை சட்டரீதியாக ஒழிக்கப்பட்டுவிட்டதென அறிவிக்கப்பட்டிருக்கிறது. பாடநூல்களிலும் அதை அச்சிட்டிருக்கிறார்கள். ஆனால், இப்போதும் பல்வேறு வடிவங்களில் தீண்டாமை கடைபிடிக்கப்படுகிறது. பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கிடையே சாதி அடிப்படையில் பேதம் பாராட்டுவது எவ்வளவு பெரிய கொடுமை! சமூக நீதிக்குப் பேர்போன தமிழ்நாட்டில் நினைத்தே பார்க்கமுடியாத வடிவங்களில் தீண்டாமை நிலவிக்கொண்டிருக்கிறது.

அம்பேதகர் தான் படிக்கும்போது மற்ற பிள்ளைகளோடு சமமாக உட்கார அனுமதிக்கப்படவில்லையென்பதையும் தான் உட்காருவதற்காக வீட்டிலிருந்து சாக்குத் துண்டு ஒன்ற எடுத்துவரும்படித் தமது ஆசிரியர் சொன்னதையும் எழுதியிருக்கிறார். மறைந்த கங்கிரஸ் தலைவர் எல்.இளையபெருமாள் தான் படிக்கும்போது பள்ளியில் ‘ பறையன் பானை’ என எழுதப்பட்ட பானை ஒன்று வைக்கப்பட்டிருந்தது எனவும் அதில்தான் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பிள்ளைகள் தண்ணீர் குடிக்க வேண்டுமென்று விதி இருந்தது எனவும் சொல்லியது நினைவுக்கு வருகிறது. ஈலையபெருமாள் குறிப்பிட்டது 75 ஆண்டுகளுக்கு முந்தைய நிலவரம். ஆனால் அதே கேவல நிலை இன்றும் தொடர்கிறது. பானை இல்லை, அதில் அப்படி எழுதப்படவில்லை என்றாலும் எல்லா பிள்ளைகளும் ஒரே பாத்திரத்திலிருந்து தண்ணீர் எடுத்துக் குடிக்க முடியாத பள்ளிகள் இப்போதும் தமிழ்நாட்டில் இருக்கவே செய்கின்றன.

தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் சத்துணவு சமைத்தால்  அதை தலித் அல்லாத சாதிகளைச் சேர்ந்த பிள்ளைகள் சாப்பிடுவதில்லை என்ற நிலை பல ஊர்களில் இருக்கிறது. அதன்காரணமாக சத்துணவுப் பணியாளர்கள் பணியிடமாற்றம் செய்யப்படுவதையும் செய்திகள் தெரிவிக்கின்றன. பள்ளிகளில் ஆண்டு முடிவில் எடுக்கப்படும் புகைப்படத்தில் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த பிள்ளைகள் இடம்பெறக்கூடாது என்பதற்காக அவர்களை அனுப்பிவிட்டு மற்ற பிள்ளைகளைமட்டும் புகைப்படம் எடுக்கும் வழக்கம் பல இடங்களில் இருக்கிறது.

இத்தகைய பாகுபாடுகள் களையப்படவேண்டும் என்பதற்காக திருமதி சோனியா காந்தி அவர்களின் தலைமையில் செயல்படும் தேசிய ஆலோசனைக் குழு ( National Advisory Council - NAC )  ஒரு துணைக்குழுவை அமைத்து சில பரிந்துரைகளை அரசுக்கு அனுப்பியிருக்கிறது. அந்தப் பரிந்துரைகள் இதுவரை செயல்வடிவம் பெறவில்லை. ’கல்வி சிறந்த தமிழ்நாடு’ என்று சொல்லப்படும் இந்த மாநிலத்தில் கல்விமீது அக்கறை உள்ளவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. அவர்களும்கூட தலித் மாணவர்களின் பிரச்சனை குறித்து அவ்வளவாகப் பேசுவதில்லை. இத்தகைய பிரச்சனைகளுக்கு ஊடகங்களிலும் போதிய இடம் கொடுக்கப்படுவதில்லை.  தேசிய ஆலோசனைக் குழு அளித்துள்ள பரிந்துரைகளின் சுருக்கம் :

 Towards ending discrimination in schools


1. MHRD along with states to take steps for defining discrimination, preparing equality declaration and Code of Conduct for schools and create mechanisms for stakeholders to engage with issues of diversity.

2. Reforms in Teacher Education and training for preparing and training teachers to handle discrimination and engaging with issues of identity, diversity, processes of social exclusion & inclusion.

3. Grievance redress to be done in non adversarial manner through dialogue, training of school management committees and local authorities on discrimination and evolving time bound and confidential ways of resolution. Role of civil society important to facilitate shiksha samvads and dispute resolution.

4. Define and specify prevalent many forms of discrimination, and make provision of disciplinary action under service rules for contravention of sec. 8 (c) & 9 (c). SCPCRs to take suo-moto cognizance of systemic discrimination. Notify minority children under sec 2 (d).

No comments:

Post a Comment