Tuesday, February 5, 2013

பயங்கரவாதத்துக்கு எதிரான போர் : அமெரிக்காவுக்கு உதவிய 54 நாடுகள்







செப்டம்பர் 2011 தாக்குதலுக்குப் பிறகு பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற பெயரில் உலகெங்கும் அமெரிக்கா மேற்கொண்ட சட்டவிரோதமான கைதுகள் மற்றும் சித்திரவதைகளுக்கு உலகின் பல்வேறு நாடுகள் கூட்டாளிகளாக இருந்த விவரங்களை ஆதாரபூர்வமாக ’ ஓப்பன் சொசைட்டி ஃபவுண்டேஷன்’ என்ற அமைப்பு ஒரு அறிக்கையாக வெளியிட்டிருக்கிறது. இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கின் மகள் அம்ரித் சிங் அந்த அறிக்கையைத் தயாரித்திருக்கிறார். அமெரிக்காவுக்கு உதவிய 54 நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம்பெறாதது வியப்பளிக்கிறது.
அமெரிக்காவின் இந்த சட்டவிரோத நடவடிக்கைகளில் உதவி செய்ததற்காக இத்தாலி நீதிமன்றம் அந்நாட்டு அதிகாரிகளைத் தண்டித்திருக்கிறது. கனடா அரசு சிரியாவில் வைத்து சித்திரவதை செய்யப்பட மகேர் அரார் என்ற கைதியிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோரியிருக்கிறது. ஸ்வீடன் ,ஆஸ்திரேலியா,இங்கிலாந்து ஆகிய மூன்று நாடுகள் தமது நாடுகளில் வைத்து அவ்வாறு சித்திரவதை செய்யப்பட கைதிகளுக்கு நட்ட ஈடு வழங்கியிருக்கின்றன. முதல் முறையாக அதிபர் தேர்தலில் போட்டியிட்டபோது இத்தகைய சட்டவிரோத வதை முகாம்களை மூடுவேன் என ஒபாமா வாக்குறுதி அளித்தார். இப்போது இரண்டாவது  முறையாகவும் அதிபராகிவிட்டார். ஆனால் இன்னும் அந்த முகாம்கள் செயல்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன.
ஐ.நா.மனித உரிமை கவுன்சிலின் மார்ச் மாத கூட்டத்தில் அமேரிக்கா இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டுவரப்போவதாக செய்திகள் வருகின்றன. தனது சட்டவிரோத நடவடிக்கைகளுக்குக் கூட்டாளியாக இருந்த இலங்கையை அமேரிக்கா தண்டித்துவிடுமா என்ன? அந்த அறிக்கையில் 45 ஆவது நாடாக இடம்பெற்றிருக்கும் இலங்கை குறித்து கூறப்பட்டிருக்கும் செய்தியை இங்கே படியுங்கள் : 

45. Sri Lanka
Sri Lanka permitted use of its airspace and airports for flights associated with CIA
extraordinary rendition operations.
Court documents indicate that at least one flight operated by Richmor Aviation
(a company that operated flights for the CIA’s extraordinary rendition program)1472
landed in Sri Lanka in 2003.1473 The documents show that between August 12 and
15, 2003, a Richmor flight registered as N85VM took off from Washington, D.C.,
and stopped in Bangkok before making another stop at Sri Lanka’s Bandaranaike
international airport in Colombo, and then flying on to Kabul, Dubai, and Shannon
airport in Ireland.1474 That flight coincided in time with the capture of Riduan
Isamuddin (Hambali) in Bangkok in 2003.1475 Isamuddin spent the next three years in
secret CIA prisons1476 before ultimately being transferred as a “high value detainee”
to Guantanamo Bay in September 2006, where he remains detained.1477 See the
detainee list in Section IV.
There have been no known judicial cases or investigations in Sri Lanka relating to
its participation in CIA secret detention and extraordinary rendition operations.

முழுமையான அறிக்கையை இங்கே வாசிக்கலாம் : http://www.opensocietyfoundations.org/sites/default/files/globalizing-torture-20120205.pdf

No comments:

Post a Comment