Sunday, December 11, 2011

‘ வலைத் தளங்களுக்குக் கட்டுப்பாடு தேவையா ? ’





 ‘ வலைத் தளங்களுக்குக் கட்டுப்பாடு தேவையா ? என்ற தலைப்பில் இன்று இரவு ஒன்பது மணிக்கு ‘சன் நியூஸ்’ தொலைக்காட்சியில்கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.



ரவிக்குமார் - எழுத்தாளர்
பிரதீப் - தகவல் தொழில்நுட்பத் துறை வல்லுனர்
கிருபா சங்கர் - வலைத்தள வல்லுனர்
பாலு- முன்னாள் காவல்துறை அதிகாரி

ஆகியோர் பங்கேற்கின்றனர்.

நடுவண் அரசின் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் திரு.கபில்சிபல் அவர்கள் வலைத் தளங்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படவேண்டும் என அண்மையில் தெரிவித்திருக்கும் கருத்து ஊடகங்களில் விவாதங்களைத் தூண்டியிருக்கிறது. அதைத் தனியே வைத்துப் பார்க்காமல், ”இந்தியாவில் இருக்கும் பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வுகாணவேண்டுமானால் மலேசியாவில் இருப்பதைப்போல ‘கட்டுப்படுத்தப்பட்ட ஜனநாயக முறை ‘ நடைமுறைப்படுத்தப்படவேண்டும் என இன்னொரு நடுவண் அமைச்சர் ஃபரூக் அப்துல்லா அவர்கள் கூறியிருப்பதோடு இணைத்துவைத்துப் பார்க்கவேண்டும் . வலைத்தளங்களுக்கு ஏற்கனவே இருக்கும் கட்டுப்பாடுகள் போதுமானவை மேலும் புதிதாக சட்டமோ விதிமுறைகளோ தேவையில்லை. தேவை சுயக் கட்டுப்பாடுதானே தவிர அரசின் கட்டுப்பாடு அல்ல. சுயக் கட்டுப்பாடு என்பது விழிப்புணர்வுமூலமே உருவாகும். எனவே பள்ளி மாணவர்களுக்கு இணையம் குறித்தும், தகவல் தொழில்நுட்பம் குறித்தும்  விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு பள்ளியிலும் என்.சி.சி , என்.எஸ்.எஸ் அமைப்புகள் இருப்பதைப்போல இதற்கெனப் பிரத்யேக அமைப்பு ஒன்றை உருவாக்கவேண்டும் என  நான் இந்த நிகழ்ச்சியில் வலியுறுத்தியிருக்கிறேன்.

’சன் நியூஸ் தொலைக்காட்சியின் ‘அவுட்புட் எடிட்டரான ’ ராஜராஜராஜன் இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து வழங்குகிறார்.   இந்த நிகழ்ச்சி ஒரு மணி நேரம் ஒளிபரப்பாகிறது. இது திங்கள் காலை எட்டு மணிக்கு மறு ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
வாய்ப்பிருந்தால்  பார்த்துவிட்டு உங்கள் கருத்துகளை எழுதுங்கள்.

2 comments:

  1. வலைப்பதிவர்களுக்கு சுயகட்டுபாடு அவசியமான ஒன்று. அதை அவர்கள் நன்றாகவே கடைபிடிக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.
    தோழரே , தங்கள் உடல் நிலை எப்படி இருக்கிறது?

    ReplyDelete
  2. நலம் பெற்று வருகிறேன். இன்னும் முழுமையாகக் குணம் அடையவில்லை. நன்றி

    ReplyDelete