Sunday, August 28, 2011

மரண தண்டனை ஒழிப்பு மாநாடு :செப் 8 ஆம் தேதி பத்துலட்சம் பேர் வேலூரை முற்றுகையிட முடிவு




மரண தண்டனையை ஒழிக்கவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துத் தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் சார்பில் சென்னை மறைமலை நகரில் மாபெரும் மாநாடு இன்று (28.08.2011) நடைபெற்றது. பாட்டாளி மக்கள் கட்சியும் விடுதலைச் சிறுத்தைகளும் சேர்ந்து நடத்திய இந்த மாநாட்டில் விடுதலை ராசேந்திரன், பேராசிரியர் சுபவீ, பெரியவர் ஆனைமுத்து , பா.ம.க வைச் சேர்ந்த கோ.க.மணி, வேல்முருகன் ஆகியோரும் வி.சி.க சார்பில் ரவிக்குமார்,சிந்தனைச்செல்வன் ஆகியோரும் பேசினர். இறுதியாக எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன், மருத்துவர் ராமதாஸ் ஆகியோர் உரையாற்றினர். செப்டம்பர் ஆறாம் தேதி தமிழகத்தின் எட்டு திசைகளிலிருந்தும் ஊர்திப்பயணமாகப் புறப்பட்டு எட்டாம் தேதி சுமார் பத்து லட்சம் பேர் வேலூரில் கூடி மரண தண்டனைக்கு எதிராகத்  தம் உணர்வுகளைத் தெரிவிப்பது என மாநாட்டில் அறிவிக்கப்பட்டது. மாநாட்டில் ‘மரண தண்டனையை ஒழிக்கவேண்டும்’ என ஒற்றைத் தீர்மானம் மட்டும் நிறைவேற்றப்பட்டது. நான்கு நாள் இடைவெளியில் கூட்டப்பட்ட இந்த மாநாட்டில் சுமார் இருபதாயிரம் பேர் கலந்துகொண்டனர். 

No comments:

Post a Comment