Thursday, May 5, 2011

நான் பிறந்த கிராமம்


நான் பிறந்த கிராமமான மாங்கணாம்பட்டில் எடுக்கப்பட்ட படங்கள் இவை. நான் எனது மொபைல் போனில் எடுத்தவை. சிதம்பரம் சீர்காழி சாலையில் கொள்ளிடம் பாலத்தைக் கடந்ததும் கிழக்கே மகேந்திரபள்ளிக்குப் போகும் சாலையில் ரயில்வே பாதையைக் கடந்து போனால் என் கிராமம் தொடங்கிவிடும். முப்போகம் விளைந்த ஊர். பசி என்பதே என்னவென்று தெரியாமல் வளர்ந்தோமென்றால் அதற்கு எங்கள் ஊரின் வளமைதான் காரணம். அந்த ஊரிலும் நிறைய மாற்றங்கள்.





முதல் படத்தில் இருப்பது எங்கள் வயல் இருக்கும் இடம். அங்கே ஒரு குளம் இருந்தது. அதில் ஏற்றம் போட்டு நீர் இரைத்து கேழ்வரகும், மிள்காயும் விளைவித்த நாட்கள் என் நினைவில் ஓடின. அந்த குளத்தில் கோடையில் பிடிக்கும் விரால் மீன்கள் கண்களில் பாய்ந்தன. அந்தக் குளம் இருந்த இடத்தில் பச்சையாக செடி முளைத்துக் கிடக்கிறது. அதுதான் இப்போது மீந்திருக்கும் அடையாளம்.

1 comment:

  1. சார் 2003 ல எடுத்த உங்க போட்டோவையும் இப்போ எடுத்த போட்டோவையும் ஒப்பிட்டு பாருங்க ,மாற்றம் தெரியும்` ஊர் மாறி இருப்பது பெரிய விசயமே இல்ல சார்!!!!

    ReplyDelete