Sunday, December 5, 2010

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணத்தொகை உயர்வு எனது கோரிக்கையை முதல்வர் ஏற்றார்

மழை வெள்ளத்தால் முழுவதுமாக சேதமடைந்த வீடுகளுக்கு இதுவரை இரண்டாயிரம் ரூபாய்தான் வழங்கப்பட்டுவந்தது. 2005 ஆம் ஆண்டில் நிர்ணயிக்கப்பட்ட இந்தத் தொகை சேதமடைந்த குடிசையைத் திருத்திக் கட்டுவதற்கு போதுமானதாக இல்லை எனவே இதை உயர்த்தி ஐந்தாயிரமாக அறிவிக்கவேண்டும் என நான் 2008 ஆம் ஆண்டிலிருந்தே கோரி வந்தேன். கடந்த 28.11.2010 அன்று இந்தக் கோரிக்கையை அரசு அதிகாரிகள்மூலமாக மாண்புமிகு முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோரின் கவனத்துக்குக் கொண்டு சென்றேன். அதை ஏற்று கடந்த 30 ஆம் தேதி முதல்வர் ஆணை பிறப்பித்துள்ளார்.கருணையோடு இந்த அறிவிப்பைச் செய்திருக்கும் முதல்வர் அவர்களுக்கு என் நன்றி.  

வெள்ளத்தால் பாழாகும் பயிருக்கு தற்போது ஏக்கர் ஒன்றுக்கு மூவாயிரம் இழப்பீடு கொடுக்கப்படுகிறது. அதை ஆறாயிரமாக அதிகரிக்க வேண்டும் என்பது எனது வேண்டுகோள். வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் இருக்கும் மாணவர்களுக்கு புதிதாக பாடநூல்களும் சீருடைகளும் வழங்கவேண்டும். நிலமற்ற விவசாயக் கூலித் தொழிலாளர்களுக்கு முப்பது நாட்களுக்கு வேலை வழங்கவேண்டும். கால்நடைகளுக்கு புல், தீவனம் முதலியவற்றைக் கொடுப்பதற்கு ஏற்பாடு செய்யவேண்டும். குயவர்கள், கொல்லர்கள் உள்ளிட்ட கைவினைஞர்களுக்கு நிவாரணம் தரவேண்டும்.மீனவர்கள் தொழிலுக்குச் செல்ல முடியவில்லை. எனவே அவர்களுக்கும் நிவாரணம் தரவேண்டும்.

குடிசைகளை மாற்றிவிட்டு கான்கிரீட் வீடுகளைக் கட்டித் தருகிற ‘ கலைஞர் வீட்டு வசதித் திட்டத்தில்’ தற்போது முழுதாக சேதமடைந்துள்ள குடிசை வீடுகள அனைத்தையும் முன்னுரிமை அடிப்படையில் இந்த ஆண்டே சேர்க்கவேண்டும்- உள்ளிட்ட கோரிக்கைகளை நான் முன்வைத்திருக்கிறேன். தமிழக அரசு இவற்றையும் பரிவோடு பரிசீலிக்கும் என நம்புகிறேன்.

1 comment:

  1. கட்சி வேறுபாடின்றி உடனடியாக,போர்க்கால அடிப்படையில் செய்யவேண்டும்.தொகுதி பிரதிநிதி என்ற முறையில் நீங்கள்தான் முழு முயற்சி எடுத்து மந்திரிகளையும்,அதிகாரிகளையும் அணுகி இதை செய்து முடிக்கவேண்டும.

    ReplyDelete