Tuesday, December 21, 2010

மரணத்துள் வாழ்வோம்

( மரணத்துள் வாழ்வோம் தொகுப்புக்கு சேரன் எழுதிய முன்னுரை )

எமது நிகழ்காலம் கொடூரமான இராணுவ அடக்குமுறைகளின் உச்சங்களையும், அவற்றுக்கெதிராக
பல்வேறு வடிவங்களிலும் வெடித்தெழும் போராட்டங்களையும் வரலாறாக்குகிறது.
அநீதி, துயரம், அறிவும் நியாயமும் கூடச் சுமந்து கொள்ளமுடியாத அளவுக்குப் படுகொலைகள்,
தங்களுடைய சொந்த மண்ணிலிருந்து வேர்கள் பிடுங்கி எறியப்பட்டு அகதிகளாய் வெளியேறுகிற
மக்கள், எல்லைப்புறங்களில் எரிந்து கொண்டிருக்கும் எமது வீடுகள், வயல்களிலிருந்து இன்னும்
அடங்காத புகை, இன்னும் அடங்காத நெருப்பு - இவையே 'சூழலின் யதார்த்தம்'.
'மனிதனுக்குரிய வாழ்க்கை உரிமைகள், மனிதனுக்குரிய கெளரவம், வாழ்க்கைக்கான உத்தரவாதம்' -
இவற்றை வெறும் வார்த்தைகளாலும் வெற்று ஒப்பந்தங்களாலும் உத்தரவாதம் செய்ய முடியாது என்ற
கசந்துபோன அரசியல் வரலாற்றின் தர்க்காரீதியான வளர்ச்சியில் இன்று நமது விடுதலைக் குரல்கள்
கண்ணி வெடிகளாகவும் கவிதைக் கண்ணிகளாகவும் ஈழம் பெறுகிற சூழலில் வாழ்கிறோம். இந்தச்
சூழல் குறிப்பாக கடந்த பதினைந்து வருடங்களாக அரும்பி வளர்ந்த ஒரு வேகம் மிக்க அரசியல்
நெறிப்பாட்டின் ஓர் உச்சநிலை எனலாம். இது எமது மக்களை அவர்களின் சமூகத் தளத்திலும்
அரசியல் தளத்திலும் வாழ்க்கை அனுபவங்கள் என்ற தளத்திலும் இதுவரை காலம் எதிர்கொண்டிராத
வாழ்நிலைகளுக்கு முகங் கொடுக்கப் பண்ணியுள்ளது. அரச பயங்கரவாதம் ஒவ்வொரு முறையும்
முகங்களைச் சிதைக்க முயன்ற போதெல்லாம் மரணத்துள் வாழும் உயிர்ப்பின் மூலம் புடமிடப்பட்ட
முகங்களை எமது மக்கள் பெற்றுக் கொள்கிறார்கள்.
ஒரு தேசிய விடுதலைப் போராட்டம் என்ற வகையில் எமது போராட்டம், தேசத்தை அதனுடைய
பெளதீக அம்சங்களில் மட்டுமே மீட்பது என்று பொருள் கொள்ள முடியாது. மாறாக, எமது மொழி,
எமது நிலம், எமது கலைகள், இலக்கியம், கலாச்சாரம் இவையனைத்தினதும் சுதந்திரமான விகசிப்பை
உருவாக்கும் ஒரு போராட்டமாகும். அந்நிய ஒடுக்குமுறை என்பது எமக்கென்றொரு பலமான
பாரம்பா¢ய செழுமைமிக்க கலாச்சார வாழ்வு இருக்கிறவரை வெற்றி பெறவே முடியாது.
தேசிய ஒடுக்குமுறை என்பது ஒட்டுமொத்தமாக ஒரு மக்கள் திரளால் உணரப்பட்டு, விடுதலை
வேட்கை பரவலாக கிளர்ந்தெழுவதற்கு முன்பாக, ஒடுக்குமுறையின் ஆரம்ப நிலைகளிலேயே
'அபாயத்தை' இனங்கண்டு கலைஞர்கள் குரலெழுப்பத் தொடங்கி விடுவதை உலகின் பல்வேறு
பகுதிகளிலும் நாம் பார்த்திருக்கிறோம். குறிப்பாக, கவிஞர்கள் வருமுன் சொல்பவர்களாக இருந்து
ள்ளனர். ரம்பத்திலேயே வெளிக்காட்டப்படும் இத்தகைய கலாச்சார ரீதியான எதிர்ப்பே பின்னர்
பல்வேறு படிகளூடாக ஆயுதப்போராட்டமாக பரிணாமம் பெறுகிறது. இந்தப் பரிணாமத்திலிருந்து
மறுபடியும் கலைகளும், இலக்கியமும் புதிய எதிர்காலத்திற்கு ஒரு முன்மொழிதலை வழங்கும்.
எமது அரசியல், கலை, இலக்கிய வரலாற்றிலும் இத் தன்மையைக் காணக்கூடியதாயிருக்கிறது.
தேசிய ஒடுக்குமுறையின் ஆரம்பநிலைகளில் தமிழ்மொழிக்குரிய உரிமைகள், தமிழ்மொழிப் பயன்பாடு
என்பவை மறுக்கப்பட்டபோது அதற்கெதிராக கவிதைக் குரல்கள் நிறையவே எழுந்தன. மஹாகவி,
முருகையன், நீலாவணன் உட்பட ஈழத்தின் அனைத்து முக்கியமான கவிஞர்களும் இவைபற்றி
வலிவுடன் எழுதியுள்ளனர். தமிழ் மொழி மீதான காதல், இனப்பற்று, இனவிடுதலை என்று
'தமிழ்நிலைப்பட்ட' ஒரு வெளிப்பாடாகவே இவை இருந்தன. அந்தவகையில் தமிழகத்தின் திராவிட
இயக்கப் போக்குக்குரிய உணர்வு, உணர்ச்சி அம்சங்களை இவை கொண்டிருந்தாலும் கூட
வடிவச்செழுமை, சொற்செட்டு, மொழியைக் கையாளும் முறைமை, பேச்சோசைத் தன்மை போன்ற
அம்சங்களில் திராவிட இயக்கப் போக்கை விட முற்றிலும் மாறுபட்ட நல்லியல்புகளில் சிலவற்றையும்
இவை கொண்டிருந்தன. இது ஒரு பொதுமைப்படுத்தப்பட்ட கருத்து அல்லத்தான் என்றாலும்,
இத்தகைய அம்சங்கள் வெளிப்பட்டிருந்தன என்பதைப் பதிவு செய்தல் அவசியம்.
இனவாதப் பண்புகள் 'கங்கை கொண்ட - கடாரம் வென்ற' மிதப்பில் கிறங்குதல் போன்ற அம்சங்கள்
காணப்பட்டாலும் பாரபட்சம், புறக்கணிப்பு, ஒடுக்குமுறை என்பவற்றிற்கெதிரான குரல்கள் என்ற
வகையில் இவை வரலாற்று முக்கியத்துவம் உடையவை.
மொழிப்பிரச்சினை என்பது தேசிய ஒடுக்குமுறை என்பதாகக் கருத்தமைவுரீதியிலும், வாழ்நிலையிலும்
குணாம்சமாற்றம் பெற்ற ஓர் இடைக்காலத்தில் இத்தகைய குணாம்ச மாற்றம் கலை இலக்கியங்களில்
கலாபூர்வமாகப் பதியப்படவில்லை. தமிழரசியல் கட்சி சார்ந்த கவிஞர்கள் மட்டும் 'உணர்ச்சிக்'
கவிதைகளாக அடுக்கிக் கொண்டிருந்தார்கள். இவற்றிலும் வீரம், செங்களம், வாள் (கவனிக்கவும்
துப்பாக்கி அல்ல), குருதி, இறப்பு என்பன இடம்பெற்றாலும், அனுபவம், வீச்சு, உண்மை அற்ற
சடங்களாக இருந்தன.
இந்தத் தொகுதியிலுள்ள கவிஞர்கள் பேசும் குருதியும், போர்க்களமும், மரணமும், தியாகமும்
உயிர்ப்புள்ளவை; சத்தியமானவை; வாழ்ந்து பெற்றவை. இவற்றிற் பாசாங்கும், போலித்தனமும்,
செயற்கையும் இல்லை. இந்தத் தர மாற்றம்தான் நமது கவிதைகளை புதியதோர் தளத்தில் விட்டுள்ளது
. இந்த மாற்றம் குறிப்பாக 1975 இலிருந்தே நிகழ்கிறது. இடைக்காலத்தில் தமிழ் மொழிப் பிரச்சினை,
அரச ஒடுக்குமுறை பற்றி எழுதுவது தீண்டத்தகாத தாகக் கருதப்பட்டது. அந்தக் காலத்தில்
பாரம்பரிய இடதுசாரி எழுத்தாளர்கள், விமர்சகர்கள் தேசிய .க்கியம் என்ற பெயா¢ல் இவ்
வெளிப்பாடுகளை எல்லாத் தளங்களிலும் புறக்கணித்தனர்.
ஒடுக்குமுறையைக் கலாச்சார ரீதியாக எதிர்த்த நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு ஒரு
முக்கியமான வரலாற்று நிகழ்வாகும். இதுகூட பாரம்பரிய இடதுசாரி கலை இலக்கியகாரரால்
கணக்கில் எடுக்கப்படவில்லை. 'அலை' சஞ்சிகையும் பிறகு 'புதுசு' சஞ்சிகையுமே கவிதையில் இந்தத்
தரமாற்றத்தை அரசியல்ரீதியாகவும், கலாபூர்வமாகவும் உருவாக்கி வளர்த்தெடுத்தவை.
தேசிய ஒடுக்குமுறை பல்வேறு வழிகளிலும் .திரமாகிக் கொண்டு வருகிறபோது ஒடுக்கப்படும்
மக்களுக்கு தமது கலைகள், கலாச்சாரம், நிலம் எல்லாவற்றிலும் மிகுந்த இறுக்கமான பிணைப்புகள்
வலிமையுறுகின்றன. ஒடுக்குமுறைக்கு எதிராகத் தேசிய விடுதலைப் போராட்டம் கிளர்ந்தெழுகையில்
அக் கிளர்ச்சி தேசத்தின் பல்வேறு அம்சங்களையும் தழுவியதமாகவே இருக்கவேண்டும்.
மேற்குலகின் அடிமைத் தளைகளில் இருந்து தம்மை விடுவித்துக் கொண்ட ஆப்ரிக்க நாடுகளின் தேசிய
விடுதலைப் போராட்டங்களும் சரி, இன்று வெள்ளை நிறவெறித் தென்னாபிரிக்க அரசிற்கெதிரான
ஆப்ரிக்க மக்களின் போராட்டமும் சரி லத்தீன் அமரிக்க மக்களின் போராட்டமும் சரி தமது
விடுதலைப் போராட்டத்தின் பகைப்புலமாக ஒரு தேசிய கலாச்சார விழிப்புணர்வையும், தமது
பாரம்பரியச் செழுமை களிலிருந்து பெற்றுப் புதுக்கிய நவீன கலை வெளிப்பாடுகளையும்
கொண்டுள்ளதைப் பார்க்கலாம்.
இவை, அந்நியப் பதிவுகளை எதிர்த்துக் கிளம்புவனளூ இருப்பிற்கெதிரான சவாலுக்கு¡¢ய
எதிர்வினைகள்; ஒடுக்குமுறைக் கெதிராகத் தமது அடையாளத்தை, தமது வேர்களை, தமது ளுமையை
முகத்திலறைந்து பிரகடனம் செய்வன.
நாங்களும் இத்தகையதொரு வரலாற்றுக் கட்டத்தில்தான் இருக்கிறோம். எத்தகைய கொடூரமான
ஒடுக்குமுறைக்குள்ளாகவும் நம்பிக்கையினது, வாழ்வை மீட்பதன் அவசியத்தினது, எதிர்காலத்தினது,
போராட்டத்தினது அழைப்புக் குரல்களை நமது கலை இலக்கியங்கள் வெளியிடுகின்றன.
தடைகளையும், துயரங்களையும், தோல்விகளையும், இழப்புக்களையும் தாங்கி அப்பாற் செல்லக்கூடிய
தார்மீக வலுவை இவை தருகின்றன.
தமிழ்க் கலை இலக்கிய வரலாற்றில் இது ஒரு முக்கியமான காலகட்டம். இந்தக் காலகட்டத்தின்
பிரதிபலிப்புகளும் தாக்கங்களும் நாடகங்களாக, வீதி நாடகங்களாக, விடுதலைப் பாடல்களாக,
தெருக்கூத்தாக, விவரணத் திரைப்படங்களாக, கவிதா நிகழ்வுகளாக பல்வேறு கலை
ஊடகங்களூடாக வெளிவருகின்றன. எதிர்பார்க்க முடிவதுபோலவே கவிதையில் இவற்றின்
வெளிப்பாடு பல உச்சங்களை எட்டுகிறது. சுவரொட்டிகள், இறந்த போராளிகளுக்கான அஞ்சலிப்
பிரசுரங்கள், துண்டுப் பிரசுரங்கள் அனைத்திலும் இன்று உயிர்த்துடிப்பு மிக்க கவிதை வா¢கள்
இடம்பெறுகின்றன. அரசியல் கவிதைகளின் பரவலை பொதுவாகவே அவதானிக்கக்கூடியதாக
இருக்கின்றது. 'அரசியல் கவிதைகள்' எனும் இந்தத் தோற்றப்பாடு இன்று ஈழத்தில் இருந்து
எழுகிறபோது அது நவீன தமிழ்க் கவிதைக்கு புதுவலிமை சேர்ப்பதாக அமைகிறது.
தேசிய ஒடுக்குமுறையின் இராணுவப் பயங்கரவாதம், யுதப் போராட்டம், மரணம் இவையான இரத்தம்
சிந்தும் அரசியலே இன்று எமது கவிதையின் பிரதான கூறாக அமைகிறது. இந்தவகையில் இவை
தரும் சேதிகள், கிளர்த்தும் அனுபவங்கள், தொற்றவைக்கும் உணர்வுகள் தமிழ் இலக்கியத்தில்
முற்றிலும் புதிய வாழ்நிலைகளைக் கொண்டுவருகின்றன.
'மரணத்துள் வாழ்வோம்' எனும் இந்தக் கவிதைத் தொகுப்பு எமது காலத்தை, காலங்களைக் கடந்து
பதிவுசெய்கிறது.
ஒருவகையில், அரசியல் கவிதைகள் என்று நாம் பிரித்துப் பார்ப்பதுகூட காலத்தின் பகைப்புலத்தில்,
கலை என்ற முழுமையில் தற்காலிகமான, குறுகிய பிரிப்புத்தான். ஏனெனில் இன்றைய சமூக, அரசியல்
நிலைமைகள் நாளை மாற்றமடைந்துவிடப் போகின்றன. அவை முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ
கலப்புச் சமூக அமைப்பில் இருந்து புதிய ஐனநாயகத்திற்காயினும் சரி, நவ காலனித்துவத்திலிருந்து
சோசலிசத்திற்காயினும் சரி, வரலாற்று இயக்கத்தில் சமூக, அரசியல் கருத்தமைவுகளும்,
கட்டமைப்புகளும் மாற்றமுற்று விடும். ஆனால் இத்தகைய காலகட்டங்களில் எழுந்த கலைப்
படைப்புக்கள் சமூக, அரசியல் கட்டமைப்பு மாற்றங்களையும் மீறி நிற்கும். அவை எப்போதும்
நிகழ்காலத்திற்குரியதாகவே இருந்துகொண்டு இறந்தகாலத்துடனும் எதிர்காலத்துடனும் ஒரு
முடிவற்ற உரையாடலைக் கொண்டிருக்கும்.
அரசியலும், நிகழ்ச்சிகளும், வரலாற்றுப் புத்தகங்களிலும் ஆவணக் காப்பகங்களிலும் புதைந்துகொள்ள,
கலைப் படைப்புகள் என்றென்றைக் குமாக மக்களோடு இன்றுபோலவே வாழ்ந்து கொண்டிருக்கும்.
கலை இலக்கியங்கள் ஒரே வட்டத்துக்குள்ளேயே சுற்றிச் சற்றிச் சுழன்று கொண்டிருந்தபோது
அவற்றை சில புதிய வழிகளுக்கு ஆற்றுப்படுத்துவது என்ற அம்சத்தில் 'அரசியல் கவிதைகள்' என்ற
வற்புறுத்தல் காலத்தின் தேவையென்றே நான் கருதுகிறேன். 'எமது காலத்து மனிதனின் தலைவிதி
அரசியல் மொழியிலேயே எழுதப் படுகிறது' என்ற தோம. மான் (Thomas Mann) எனும் நாவலாசி¡¢யர்
எழுதியிருப்பதை இங்கு நினைவுகூர்வது பொருத்தமானது.
இந்தத் தொகுதியில் இடம்பெற்றுள்ள முப்பத்தொரு கவிஞர்களும் ஒரே தரத்தினர் அல்லர். ஈழத்தின்
மூத்த கவிஞர் என வழங்கப்படும் முருகையனிலிருந்து தமது முதலாவது கவிதையை இத் தொகுதியில்
எழுதியிருக்கும் மிக இளம் வயதினரான ஒளவை, கீதப்பி¡¢யன் வரை பல்வேறு தலைமுறைகளைச்
சேர்ந்தவர்களின் கவிதைகள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன. ஒருவகையில் 'பதினொரு ஈழத்துக்
கவிஞர்கள்' (க்ரியா, சென்னை, 1984) தொகுதியின் பதினோராவது கவிஞருக்குப் பிறகு
சேர்க்கப்படக்கூடிய கவிஞர்கள் இத் தொகுதியில் உள்ளனர் என்றும் சொல்லலாம்.
இந்தத் தொகுதிக்குரிய கவிதைகளைத் தெரிவுசெய்கையில் ஓர் இறுக்கமான, சீரான கவித் தரத்தைப்
பேணுவது என்பது கடினமானதாகவே இருந்தது. பிரதானமாக ஈழத்துத் தமிழ்க் கவிதையின் அரசியல்
பரிமாணங்களை இயன்றவரை வெவ்வேறு தலைமுறைக் கவிஞர்களூடாக சித்திரிக்க விழைந்தமையே
இத் தொகுப்பின் நோக்கம் என்பதில், கவிதைத் தெரிவுகளைப் பொறுத்து ஓரளவு நெகிழ்ச்சி
காட்டவேண்டிய தேவையும் இருந்தது.
மைத்ரேயி, ஒளவை, து.யந்தன், மா.சித்திவிநாயகம்பிள்ளை, கீதப்பிரியன், உதயன், செழியன்,
நிலாந்தன் கியோர் எமது மிகவும் புதிய தலைமுறையின் ஆரம்பக் கவிஞர்கள். இவர்களனைவரும்
வயதில் மிகவும் இளையவர்கள் என்பதையும் மனங்கொள்ள வேண்டும்.
தமிழ்க் கலாச்சார மரபில் கவிதை எப்பொழுதும் முக்கியமான இடத்தைப் பெற்றுவந்துள்ளது. குறித்த
சில காலகட்டங்களில் கவிதை கலையாக மட்டுமன்றி வாழ்க்கை முறையாகவும் இருந்துவந்துள்ளது.
சங்ககாலக் கவிதைகளிலிருந்து வள்ளுவர், கம்பர், இளங்கோ, மணிவாசகர், சித்தர்கள், பாரதி என்று
ஒரு செழிப்பான கவிதைப் பாரம்பரியம் ஒன்று இன்றைய கவிதைகளுக்கு அடிநாதமாக உள்ளது.
இந்தப் பாரம்பரியம்  ஈழத்திலும் தமிழகத்திலும் பின்னர் வெவ்வேறு திசைகளில் கிளைபிரிந்தது என்பது
முக்கியமான அம்சமாகும். (இது குறித்து விளக்கமான கட்டுரைகளுக்குப் பார்க்கவும் : 'ம.¡கவியும்
தமிழ்க் கவிதையும்' - சண்முகம் சிவலிங்கம், பின்னுரை, ம.¡கவியின் கோடை, 1970; இருபதாம்
நு¡ற்றாண்டு ஈழத்துத் தமிழ் இலக்கியம், 1979)
ஈழத்துத் தமிழ்க் கவிதை மரபின் தனித்துவம், தொடர்ச்சி, இன்றைய அதன் புதிய பா¢மாணங்கள் பற்றி
ஏற்கனவே நுஃமான், சண்முகம் சிவலிங்கம், முருகையன், செ.யோகராசா போன்றவர்கள் வி¡¢வாக
எழுதியுள்ளனர். தமிழகத்திலும் ஞானி, எ..வி.ரா.துரை, தமிழவன் போன்றவர்களால் இவை பதிவு
செய்யப்பட்டுள்ளன. அலங்காரமும் ஆடம்பரமும் அற்று, சொற்செட்டும் இறுக்கமும் மிக்கதான ஒரு
நடையிலும், லயத்திலும் இக் கவிதைகள் வீடற்ற நிலை, நிலத்தின் மீதான பிணைப்பு, மனிதம்,
விடுதலை, துணிவு, வீரம் என்பவற்றைப் பேசுகின்றன. உறுதியும், மனவெழுச்சியும், கோபமும் விரவிய
மொழிநடை இதற்குத் துணைபு¡¢கிறது. இத்தகைய உணர்வு/உணர்ச்சி நிலைகளில் கவிதை பல
சந்தர்ப்பங்களில் ஒத்திசைவையும் பேணுவதை இத் தொகுப்பில் அவதானிக்கலாம்.
சிந்தனையின் ஆழமும் படைப்பு வீச்சும் ஒருங்கே இணைந்து வரும் கவிதைகளை உயர்ந்தவை என்றும்,
ஓசை, உணர்ச்சி சார்ந்துவரும் கவிதைகள் ஒருபடி இறங்கியவை என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.
எங்களுடைய அனுபவம் இது சா¢யல்ல என்பதையே உணர்த்துகிறது. ஏனெனில் எமது சூழலில் கவிதை
மெளன வாசிப்பிற்கும் புத்திஐ£விகளுக்கும் மட்டும் என்றில்லாமல், சாதாரண மனிதனின்
உள்ளத்திற்குமானதாக வெளிவரவேண்டிய அவசியம் உள்ளது. இந்தச் சமூக அமைப்பில் கலைகள்,
இலக்கியம் இலாப நோக்கம் கொண்ட வியாபாரக் கலைகளாகவே இடம்பெறுகின்றன. இவை
'படைப்பு' என்பதாக அல்லாமல் 'உற்பத்திகள்' என்ற தரத்திலேயே வழங்கப்படுகின்றன. எனவே,
சுதந்திரமான உண்மைக் கலைப்படைப்புகளுக்கு இச் சமூக அமைப்பு எதிரானது. தன்னை இழந்து
அந்நியமாக்கப்பட்டவனாக இந்தச் சமூக அமைப்பில் மனிதன் வாழ்கிறான். இவனுக்காக முதலாளித்து
வம் மக்கள் ரசனை, ஐனரஞ்சகக் கலை என்ற பெயரில் போலிக் கலை இலக்கியங்களைப் புனைந்து
கொடுக்கிறதுளூ கனவுகளை வியாபாரம் செய்கிறது. அந்நியமாக்கப்பட்ட இத்தகைய போலிக் கலை
இலக்கியங்களைப் புசிக்கின்ற மனிதனுக்கு உண்மையான கலை இலக்கியங்கள் எட்டுவதில்லை. இந்
நிலையில் கவிஞனுக்கும் மக்கள் திரளுக்கும் இடையில் 'விவாகரத்து' நிகழ்ந்துவிடுகிறது.
உண்மையான கவிஞன் தொடர்புகொள்ள முடியாத ஏராளம் மக்கள் இச் சமூகத்தில் உள்ளனர்.
இதற்காக ஒரு பகுதியினர் கவிஞனையும், வேறொரு பகுதியினர் மக்களையும் குற்றம் சாட்டுகின்றனர்.
ஆனால் பிரச்சினை, எவ்வாறு இந்தத் தொடர்புத் தடையை நீக்குவது என்பதே.
அரசியல் எழுச்சியும் கலாச்சார விழிப்புணர்வும், இருக்கிற சூழ்நிலையில் பிரக்ஞைபூர்வமாக
கலாச்சாரத் தளத்தில் இயங்குவதன் மூலம் இத் தொடர்புத் தடையைக் குறைக்கலாம் என்பது
எங்களுடைய அனுபவமாக உள்ளது. கவிதையையும் பாடல்களையும் இணைப்பது, நாடகங்களில்
கவிதையை இணைப்பது (இவ் இணைப்புகள் அந்தந்த ஊடகத்தின் கலைத்துவமும் தனித்துவமும்
பாதிக்கப்படா வகையில் இடம்பெறல்) போன்ற வழிகளில் இது செயல்படும். கவிதைகள் அரங்கில்
பின்னணி இசையுடன் நிகழ்த்தப்படுகையில் அரசியல் சார்ந்து வருவதால் கவிதையின் வாசகர்கள்,
ரசிகர்கள், கேட்பவர்கள் வட்டம் அகலிக்கிறது. இவ்வாறு தரமான கலை இலக்கியங்களின்
வட்டங்களை அகலிக்கும் ஒரு கலாச்சார இயக்கமே இங்கு உருவாகியுள்ளது. வாய்மொழி, ஓசை,
நாட்டார் வழக்கியலுக்குத் திரும்புதல் எல்லாம் ஒரு முக்கியமான அம்சமாக இங்கு இடம்பெறுகிறது.
அறிவுபூர்வமானது, உணர்வுபூர்வமானது என்ற பிரிப்புகளின்றி எ.ரா பவுண்ட் சொல்வதுபோல
அறிவுபூர்வமாகவும் உணர்வுபூர்வமாகவும் உட்கலந்துவரும் படிமங்களுடன்' கூடிய கவிதைகளை இத்
தொகுப்பில் காணலாம். உதாரணத்திற்கு பின்வரும் கவி வரிகளைப் பார்க்கலாம்:
இருளின் அமைதியில்
வெளியில் கரைந்தேன்
விழியின் மணிகளில்
தீப்பொறி ஏந்தினேன்.
- (இளவாலை விஐயேந்திரன் -'பாதியாய் உலகின் பரிமாணம்' - பக்.126)
இந்தத் தொகுதியின் முக்கியமான இன்னொரு அம்சம் இதிலுள்ள பெண் கவிஞர்கள். ஊர்வசி,
மைத்ரேயி, ஒளவை ஆகிய மூன்று பெண் கவிஞர்கள் இடம்பெற்றுள்ளனர். எமது வாழ்நிலையின்
பெண்நிலைப்பட்ட அனுபவங்கள் உயிர்த்துடிப்புடன் வருகின்றன. தமிழில் வரப்போகிற முக்கியமான
பெண் கவிஞர்களை இத் தொகுதி இனங்காட்டுகிறது. தேசிய விடுதலைப் போராட்ட உணர்வு
அலைகளுடன் இணைந்ததாய் 'பெண்விடுதலை' குரலும், பெண்நிலைவாதமும் வலுவடைந்துவரும்
நிலையில் மேலும் பல பெண் படைப்பாளிகள் உருவாகி வருகிறார்கள் என்பதையும் அவதானிக்க
முடிகிறது.
தேசிய விடுதலைப் போராட்டத்தினுள் 'போராட்டத்துள் ஒரு போராட்டமாக' விடுதலைப் போ¡¢ன் சில
பிரச்சினைகள் பற்றிய விமர்சனங்களும் இக் கவிதைகள் சிலவற்றில் வருகின்றன.
சர்வதேச அரசியலுடனும், இந்து சமுத்திரப் பகுதி பூகோள அரசியலுடனும் நிபந்தனையற்றுப்
பிணைக்கப்பட்டுவிட்ட எமது விடுதலைப் போராட்டம் (இதற்கு நாமும் பங்காளிகள் என்பதை மறந்து
விட முடியாது) அரைகுறைத் தீர்வுகள்மூலம், அல்லது வல்லரசுப் பின்னணிகளின் விளைவான
சமரசங்கள் மூலம் பின்தள்ளப்படுகிற அபாயம் இருந்து கொண்டேயிருக்கிறது. இவ்வாறான ஒரு
பின்தள்ளல் நிகழ்ந்து விட்டாலும்கூட இந்தக் கவிதைகள் காலம் காலமாக நின்று எமது
துயரங்களையும், சொல்லில் மாளாத இழப்பு களையும், மரணத்துள் வாழ்ந்த கதையையும் சொல்லி
உலகின் மனச்சாட்சியை அதிரவைத்துக் கொண்டேயிருக்கும். அந்த அதிர்வுகள், விடுதலைப் போ¡¢ன்
எத்தகைய பின்தள்ளல் களையும் வெறுப்புடன் பார்த்து கவிதா அனல் உமிழ்ந்து கொண்டேயிருக்கும்.
நமது விடுதலைக்கு மட்டுமல்ல தென்னாசியாவிற்கே ஒரு விடுதலைப் பொறியை அவை ஒருநாள்
ஏற்றும்.

- உ.சேரன்
'நீழல்'
அளவெட்டி
12.10.85

No comments:

Post a Comment