Friday, June 16, 2017

துப்புரவுத் தொழிலாளர்களை வஞ்சிக்கும் பாஜக அரசு - ரவிக்குமார்* துப்புரவுத் தொழிலாளர் மறுவாழ்வுக்கான நிதி ஒதுக்கீடு 2013-14ல் 557 கோடி, 2017-18 பட்ஜெட்டில் மோடி அரசு ஒதுக்கியிருப்பது வெறும் 50 கோடி

* 2014-15 ல் பாஜக அரசு பட்ஜெட்டில் இதற்காக 439.04 கோடி ஒதுக்கி 47 கோடி மட்டுமே செலவு செய்தது

* 2015-16 பட்ஜெட்டில் துப்புரவு தொழிலாளர் மறுவாழ்வுக்கு 470.19கோடி ஒதுக்கப்பட்டு 10.01 கோடி மட்டும்தான் செலவிடப்பட்டது

* 2016-17 பட்ஜெட்டில் வெறும் 10 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டது. அதிலும் ஒரே ஒரு கோடி மட்டும்தான் செலவிடப்பட்டது

இதை காங்கிரஸ் உள்ளிட்ட எந்தவொரு எதிர்கட்சியும் சுட்டிக்காட்டவோ எதிர்க்கவோ இல்லை என்பதுதான் மிகப்பெரிய அவலம்

கும்பலாட்சியிலிருந்து கொடுங்கோன்மைக்கு’ - நூல் வெளியீட்டு விழா : ஒரு பதிவு - மருதன்
தோழர் ரவிக்குமாருடன் விரிவாக உரையாடும் வாய்ப்பு இன்று கிடைத்தது. பெரியார் குறித்த அவருடைய 'சர்ச்சைக்குரிய' நிலைப்பாடு, கலைஞர், திராவிட இயக்கம், ஹியூகோ கொரிஞ்சியின் புதிய நூல், மணற்கேணி இதழ், அம்பேத்கர், நிறப்பிரிகை என்று பல விஷயங்களைப் பேசினார். நடப்பு அரசியல் பின்னணியில் சமீபத்தில் அவர் எழுதிய பல்வேறு கட்டுரைகள், ‘கும்பலாட்சியிலிருந்து கொடுங்கோன்மைக்கு’ என்னும் தலைப்பில் நூலாக தொகுக்கப்பட்டிருக்கிறது. இந்நூலின் வெளியீட்டு விழாவில் கலந்துகொள்வதற்காக அம்பேத்கர் திடல் சென்றிருந்தேன்.

தலைப்பு சரிதான், ஆனால் ‘தலித் பார்வையில் பாஜக ஆட்சி’ என்னும் உப தலைப்பை ரவிக்குமார் வைத்தது ஏன் என்னும் கேள்வியை எழுப்பினார் சிறப்புரை ஆற்றிய தோழர் ஜி. ராமகிருஷ்ணன். ‘மதவாதம், வெறுப்பு அரசியல், சாதிய பாகுபாடுகள், தீண்டாமை, வகுப்புவாதம் என்று அனைத்தையும் ரவிக்குமார் இடதுசாரி நிலைப்பாட்டில் நின்று எதிர்த்திருக்கும்போது எதற்குத் தனியாக ‘தலித் பார்வையில்’ என்று  அட்டையில் குறிப்பிடவேண்டும்?’ வலதுசாரிகளின் பலம் சமீபகாலமாக பெருகிவருவது குறித்து அவநம்பிக்கை கொள்ளவேண்டியதில்லை என்றார் ஜிஆர். மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் ஆகிய பகுதிகளில் விவசாயிகள் கிளர்ந்தெழுந்து போராட்டத்தில் ஈடுபட்டிருப்பது நம்பிக்கையளிக்கும்படியாக இருக்கிறது. குறைந்தபட்ச கொள்முதல் விலை நிர்ணயம், கடன் தள்ளுபடி என்று மாநில அரசாங்கங்கள் இறங்கிவருவது இந்தப் போராட்டங்களுக்குக் கிடைத்த வெற்றி. ‘வர்க்கப் போரட்டத்தின் ஒரு பகுதியாகவே விவசாயப் போராட்டத்தை எடுத்துக்கொள்ளவேண்டும்.’ என்றார் தோழர் ஜிஆர்.

‘தலித் பார்வையில் பாஜக ’ என்று உபதலைப்பு இடவேண்டிய அவசியத்தை ரவிக்குமார் பின்னர் விளக்கினார். பாஜகவின் தலித் வாக்கு வங்கி முன்பைவிட இப்போது அதிகரித்திருக்கிறது. ராம் விலாஸ் பாஸ்வான், அத்வாலே ஆகிய தலித் தலைவர்களை உள்ளிழுத்துக்கொண்டு தலித் வாக்குகளைத் தீவிரமாக வேட்டையாடிக்கொண்டிருக்கிறது மோடியின் பாஜக. கேரளாவில் அய்யன்காளி புகழ் பாடுகிறார் மோடி. அவ்வாறே நாராயண குருவையும் பயன்படுத்திக்கொள்ளத் துடிக்கிறார். மற்றொரு பக்கம், புரட்சியாளர் அம்பேத்கரை இந்துத்துவ வலைக்குள் சிக்கவைக்க அவர் கட்சியினர் முயன்றுகொண்டிருக்கிறார்கள். தலித்துகளைக் கவர்ந்திழுக்கவும் நாங்கள் ஒடுக்கப்பட்ட மக்களின் நண்பர்கள்தாம் என்று காட்டிக்கொள்ளவும் இத்தகைய முயற்சிகளில் மோடி ஈடுபட்டு வருகிறார். இது தவறான, மோசடியான போக்கு என்பதை நிரூபிக்கவேண்டும். நடைபெறுவது தலித்துகளுக்கும் விரோதமான ஆட்சி என்பதை அழுத்தமாக உணர்த்தவே அந்த உபதலைப்பு என்றார் ரவிக்குமார்.

முஸ்லிம்களுக்கும் தலித்துகளுக்கும் மட்டுமல்ல; தற்சமயம் நடைபெறுவது அனைத்து மக்களுக்கும் எதிரான ஆட்சி என்றார் ஜவாஹிருல்லா. மோடியின் ஆட்சியை ஏன் ஜனநாயக ஆட்சி என்று அழைக்கமுடியாது என்பதை விரிவாக விவரித்தார் திருமாவளவன். மக்களின் முடிவுகள் அல்ல, குறிப்பிட்ட சில கும்பல்களின் முடிவுகளே இன்று நம்மை ஆதிக்கம் செய்கின்றன. நம் அன்றாட வாழ்வில் இந்தக் கும்பல்கள் தலையிட்டுக்கொண்டிருக்கின்றன. ஒருவருடைய வீட்டு சமையலறைக்குள் சென்று, என்ன சமைக்கப்பட்டிருக்கிறது என்று சரிபார்த்து பிறகு தாக்கும் துணிச்சல் எங்கிருந்து சிலருக்கு வருகிறது? மாடுகளை ஏற்றிச்செல்லும் வண்டிகளை இடைமறித்து, தகுந்த ஆவணங்கள் இருந்தாலும் தாக்கும் அதிகாரத்தைச் சிலருக்கு யார் அளித்தது? இந்தக் கும்பல்கள் தங்களுக்கான அதிகாரத்தை எங்கிருந்து பெறுகின்றன? 

மீண்டும் மோடி தேர்ந்தெடுக்கப்பட்டால் தற்போது நிலவும் கும்பலாட்சி கொடுங்கோன்மை ஆட்சியாக மாறிவிடும். கும்பலாட்சிக்கு சட்ட அங்கீகாரம் கிடையாது. ஆனால் கொடுங்கோன்மை ஆட்சிக்கு அந்த அங்கீகாரமும் கிடைத்துவிடும். அப்படி நேர்வதை நாம் அனுமதிக்கக்கூடாது என்றார் திருமாவளவன். மத்தியில் மட்டுமல்ல தமிழகத்திலும் பாஜக ஆட்சியைக் கைப்பற்ற மேற்கொள்ளும் ஆபத்தான முயற்சிகளை அவர் சுட்டிக்காட்டினார். ‘விமரிசனங்கள் பல இருந்தாலும் அதிமுக ஆட்சி கலைக்கப்படுவதை நாங்கள் எதிர்ப்பதற்குக் காரணம் அதுதான். திமுகமீதும்கூட விமரிசனங்கள் இருக்கின்றன என்றாலும் பாஜக அவர்களையும் சேர்த்தே வீழ்த்த நினைக்கிறது. அதிமுகவின் இடத்தில் ஒருவேளை சிபிஎம் வந்து அமர்ந்தால் ரத்தனக் கம்பளம் விரித்து வரவேற்கலாம். ஆனால் பாஜக போன்ற ஜனநாயக விரோத சக்திகள் வருவதை எப்படிப் பொறுத்துக்கொள்ளமுடியும்?’

வகுப்புவாத அபாயத்துக்கு எதிரான அணிதிரட்டலை எப்படி மேற்கொள்வது? ஒடுக்கப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட மக்களை ஒன்றிணைப்பதன்மூலம் என்றனர் திருமாவளவனும் ரவிக்குமாரும். வர்க்க உணர்வை வலுப்படுத்துவதன்மூலம்  என்றார் தோழர் ஜிஆர். 

அழைப்புக்கும் உரையாடலுக்கும் நன்றி, தோழர்  ரவிக்குமார்.  உங்கள் முயற்சிகள் வெற்றிபெற வாழ்த்துகள். விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தோழர்கள் முகமது யூசுஃப், சிந்தனைச்செல்வன் இருவருக்கும் நன்றியும் வாழ்த்துகளும்.

( தோழர் மருதன் அவர்கள் தனது முகநூல் பக்கத்தில் இட்டிருக்கும் பதிவு ) 

Thursday, May 18, 2017

Civility in politics - A round table


Civility in politics என்ற தலைப்பில் The Hindu Centre for Politics and Public Policy அமைப்பும் , அமெரிக்க தூதரகமும் இணைந்து கருத்துப் பரிமாற்றக் கூட்டம் ஒன்றை இன்று ஏற்பாடு செய்திருந்தனர். அதில் பங்கேற்க நான் அழைக்கப்பட்டிருந்தேன். 

அமெரிக்காவைச் சேர்ந்த செனட்டர் டேப் எம் பீட்டர்ஸ் ( குடியரசுக் கட்சி) பிரதிநிதி ஹெலென் எம் கீலி ( ஜனநாயகக் கட்சி ) ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக வந்திருந்தனர். 

பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை, சிபிஐ எம் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ஆர், அதிமுக முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன், திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் பூங்கோதை, மனு சுந்தரம், இளைஞர் காங்கிரஸ் யுவராஜ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொஹிதீன் ஆகியோர் அரசியல் கட்சிகளின் சார்பில் கலந்துகொண்டனர். 

நீதிபதி கே.சந்துரு, முன்னாள் துணைவேந்தர் வசந்திதேவி, முன்னாள் மாநிலத் தலைமைத்  தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா, முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் ஆகியோரும் பங்கேற்றனர். 

என். ராம் தலைமை வகித்தார். வி.எஸ்.சம்பந்தன் அறிமுகவுரையாற்றினார். 

சுமார் இரண்டரை மணி நேரம் நடைபெற்ற கூட்டத்தில் பயன்மிக்க கருத்துகள் பரிமாறிக்கொள்ளப்பட்டன. அரசியலில் கண்ணியமும் நாகரிகமும் குறைந்துவருவது உலகளாவிய போக்காக இருப்பதை எல்லோருமே கவலையோடு சுட்டிக் காட்டினார்கள். 

ஏற்றத் தாழ்வை அங்கீகரிக்கும் சமூக ஒழுங்குக்கும் சமத்துவத்தை உத்தரவாதப்படுத்தும் அரசியலமைப்பு சட்டம் உள்ளிட்ட சட்டங்களுக்கும் இடையே உள்ள முரண்பாடு எப்படி அரசியல் நாகரிகத்துக்கு எதிராக உள்ளது என்பதை நான் சுட்டிக்காட்டினேன். அதிகரித்துவரும் வெறுப்புக் குற்றங்கள் அவற்றைத் தடுப்பதற்கு தனியே சட்டம் எதுவும் இல்லாதது, ஐநா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டபோதும் வெறுப்புக் குற்றங்களைத் தடுக்க இந்தியா சட்டம் இயற்றாதது ஆகியவற்றை விவரித்தேன். தற்போது இந்தியாவை அச்சுறுத்தும் வகுப்புவாதம் எப்படி அரசியல் நாகரிகத்துக்கு எதிராக செயல்படுகிறது என்பதை சுட்டிக்காட்டினேன். 

பத்திரிகையாளர்கள் கே.பி.சுனில், விஜயசங்கர், ஆர்.கே, கோலப்பன், அரவிந்தன் ஆகியோரும் வந்திருந்தனர்

Sunday, May 14, 2017

மனிதனுக்கு முன்னால் - கே.சச்சிதானந்தன் தமிழில்: ரவிக்குமார்


மனிதர்கள் பேசத் தொடங்குவதற்கு முன்னால் 
மிருகங்கள் பேசின
மிருகங்களுக்கு முன்னால் மரங்கள் பேசின, மரங்களுக்கு முன்னால் மலைகள் பேசின, மலைகளுக்கு முன்னால் சமுத்திரங்கள் பேசின, சமுத்திரங்களுக்கு முன்னால் ஆகாயம் பேசியது

பிறகு, பேசத் தொடங்கினான் மனிதன், 
அந்த கணத்தில் அற்றுப்போனது அனைத்தின் பேச்சுகளும் 
அவற்றின் மௌனத்தின் மீது உருண்டது மனிதனின் எஃகு போன்ற குரல்

விடியலின்போது நீங்கள் பார்ப்பதில்லையா எல்லாவற்றின்மீதும் படிந்திருக்கும் ரத்தத்தை?

Friday, May 12, 2017

ஃபேஸ் புக் லைவ் மூலம் நூல்கள் அறிமுகம் : ஒரு அறிவிப்பு

 

முக்கியமான தமிழ், ஆங்கில நூல்களை ஃபேஸ் புக் லைவ் மூலம் அறிமுகப்படுத்தி வருகிறேன்.அதைக் காண்பதற்கு நண்பர்கள் காட்டிவரும் ஆர்வம் ஊக்கமளிக்கிறது. 

இனி வாரத்துக்கு இரண்டு நூல்கள் அறிமுகப்படுத்தப்படும். அதன் இரண்டு நிமிட வீடியோ ட்விட்டரிலும் பகிரப்படும்.


Education Census reveals the pathetic condition of Tamilnadu

Shocking!
Education Census reveals the pathetic condition of Tamilnadu 

- Ravikumar 

Tamilnadu has a huge number of illiterate population. More than two Crore people are illiterate. 

In Tamilnadu 122 lakh women are illiterate

Tamilnadu has 81 lakh male illiterates

In Tamilnadu only 7.70% population is graduates

In Tamilnadu total number of people studied  graduate and above is 5457742

In Tamilnadu number of male graduates is 3119342

In Tamilnadu total number of female graduates is 2338400

Sunday, May 7, 2017

மத்திய அரசின் நிலத்தடிநீர் மசோதா: விவசாயிகளின்மீது இன்னொரு தாக்குதல் - ரவிக்குமார்நிலத்தடி நீர் பயன்பாட்டை முறைப்படுத்துகிறோம் என்ற பெயரில் விவசாயப் பயன்பாட்டுக்கு பம்ப் செட்டுகள் மூலம் எடுக்கப்படும் நிலத்தடி நீருக்குக் கட்டணம் வசூலிக்கும் முயற்சியில் சட்டம் ஒன்றை இயற்றுவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கான சட்ட மசோதா இப்போது மாநில அரசுகளுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக இன்று இந்து ஆங்கில நாளேட்டில் செய்திக் கட்டுரை ஒன்று வெளியாகியிருக்கிறது. 


மத்திய அரசு கொண்டுவரும் இந்த சட்டம் 14 ஆவது நிதிக்குழு பரிந்துரைகளின் ஒரு அம்சம் ஆகும். 2015 ல் 14 ஆவது நிதிக்குழு அறிக்கை வெளியானபோதே அதில் இடம்பெற்றிருந்த விவசாயிகளுக்கு எதிரான அம்சங்களை நான் சுட்டிக்காட்டி கட்டுரைகளை எழுதினேன். 2015 பிப்ரவரியில் நான் 26.02.2015 அன்று எழுதிய கட்டுரை ஒன்றின் ஒரு பகுதியை இங்கே தருகிறேன்: 


=====

விவசாயிகளுக்கு வேட்டுவைக்கும் 14 ஆவது நிதிக்குழு பரிந்துரைகள் 14 ஆவது நிதிக்குழுவின் பரிந்துரைகளை ஏற்றுக்கொள்வதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது. அந்தப் பரிந்துரைகளில் முக்கியமானவை பொதுமக்கள் பயன்படுத்தும் வசதிகள் தொடர்பான பரிந்துரைகளாகும். பாசனத்துக்குப் பயன்படுத்தப்படும் தண்ணீரையும் அளக்கவேண்டும்; மின் மோட்டார்கள் அனைத்துக்கும் மீட்டர் பொருத்தவேண்டும் என அந்தப் பரிந்துரைகளில் சொல்லப்பட்டிருக்கிறது. 


பரிந்துரை எண் 84 முதல் 92 வரை அதுகுறித்துப் பேசப்பட்டிருக்கிறது. மின்சார நுகர்வு அனைத்துக்கும் ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மீட்டர் பொருத்தப்படவேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இது இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்துக்கு உலை வைப்பதுதவிர வேறல்ல. 


குடிதண்ணீர் மட்டுமின்றி பாசனத்துக்குப் பயன்படுத்தப்படும் தண்ணீரையும் அளப்பதற்கு 2017 ஆம் ஆண்டுக்குள் மீட்டர் பொருத்தவேண்டும். குடிப்பதற்கும், பாசனத்துக்கும் பிற தேவைகளுக்கும் பயன்படுத்தப்படும் தண்ணீர் அனைத்துக்கும் கட்டணத்தை நிர்ணயிப்பதற்கு சுயேச்சையான அமைப்பு ஒன்றை மாநில அரசுகள் உருவாக்கவேண்டும் என அது பரிந்துரை செய்திருக்கிறது. 


இந்தப் பரிந்துரைகளை மத்திய அரசு அப்படியே ஏற்றுக்கொண்டிருப்பது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான திருத்த மசோதாவின் அச்சுறுத்தலிலிருந்து விவசாயிகள் விடுபடாத நிலையில் மேலும் அவர்கள்மீது தாக்குதலைத் தொடுத்திருக்கிறது மத்திய அரசு. இந்தப் பரிந்துரைகளைத் தமிழக அரசு ஏற்று நடைமுறைப்படுத்தப் போகிறதா? அல்லது தனது எதிர்ப்பை மத்திய அரசுக்குத் தெரிவிக்கப்போகிறதா?